ஜமைக்கா சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நெல்லை இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
அட்மின் மீடியா
0
ஜமைக்கா சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நெல்லை இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
வட அமெரிக்கா அருகில் உள்ள ஜமைக்கா நாட்டின் அமைந்துள்ள பிராவிடன்ஸ் தீவில் லீ ஹை ரோடு என்ற இடத்தில் ஜேகே புட் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது.
இங்கு தமிழகத்தின் திருநெல்வேலியை சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த சூப்பர் மார்க்கெட்டை சுரண்டையைச் சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் திடீரென 5 க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் விக்னேஷ் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து உயிரிழந்தவரின் உடலை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று விக்னேஷின் உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1869587709414752713
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ