Breaking News

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் போக்குவரத்துத் துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் போக்குவரத்துத் துறை அறிவிப்பு


தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என் அஅனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பேருந்து ஓட்டுனர்கள் செல்போனை பார்த்தபடியும்,  பேசியும் வாகனத்தை இயக்குவதாக பயணிகள் புகார்கள் அளித்திருந்த நிலையில், போக்குவரத்துத் துறை ஒரு அதிரடி உத்தரவை வெளிட்டுள்ளது.

அதன்படி, அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவர். இது தொடர்பாக, அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback