விஷ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பேச்சு

அட்மின் மீடியா
0

விஷ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பேச்சு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அலகாபாத் உயர்நீதிமன்ற நூலக அறையில் கடந்த டிச. 8 ஆம் தேதி வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) அமைப்பின் சட்டப்பிரிவு மாநாட்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பங்கேற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நீதிபதி யாதவ் கூட்டத்தில் பேசுகையில், 

இது ஹிந்துஸ்தான், இங்கு வாழும் பெரும்பான்மையினர் சமூகத்தின் விருப்பப்படியே இந்த நாடு செயல்படும்,பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துவது மட்டுமே இங்கு ஏற்றுக்கொள்ளப்படும்,நாட்டிற்கு கேடு விளைவிப்பவர்கள், தேசத்திற்கு விரோதமானவர்கள், பொதுமக்களை தூண்டிவிடுபவர்கள் தான் இந்த 'கத்முல்லா'க்கள்,அவர்கள் நாடு முன்னேறுவதை விரும்பாதவர்கள், அவர்களிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறான 'கத்முல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேச்சு

அரசியலமைப்பு சட்ட அவசியம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.அப்போது நீதிபதி சேகர் யாதவ் பேசுகையில், “இது ஒரு இந்துஸ்தான் நாடு என்பதைக் கூற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இங்கு மெஜாரிட்டியாக வாழ்பவர்களுக்கு ஏற்றவகையில் இந்நாடு செயல்படுகிறது. இதுதான் சட்டம். இதை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சொல்வதாக யாரும் கருதக் கூடாது. சட்டம் என்பது மெஜாரிட்டியை பொறுத்தே அமையும். இதையே ஒரு சமூகம் அல்லது குடும்பத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதிலும் மெஜாரிட்டியின் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதே ஏற்கப்படுகிறது” என்றார்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் முஸ்லீம்களுக்கு எதிரான நீதிபதி சேகர் குமார் யாதவின் பேச்சுக்கள் ஒரு தீய, கொடூரமான மற்றும் விஷத்தன்மை கொண்டவை. விஷ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்று அரசியலமைப்பின் நெறிமுறைகள், அதன் அடிப்படைக் கட்டமைப்பான மதச்சார்பின்மைக்கு எதிராக பேசியுள்ளார். இது நீதித்துறையின் சுதந்திரத்தை உள்ளே இருந்துகொண்டே நாசப்படுத்துவதற்கு சமம்- நீதிபதி சேகர் குமார் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசுத் தலைவருக்கு இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்

விஎச்பி மாநாட்டில் நீதிபதி கலந்துகொண்டு பேசியது பற்றிய விவரங்களை அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. நீதிபதி பேசிய விவரங்களை வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியது செய்தித்தாள்களின் மூலமாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. 

நீதிபதி யாதவ் நிகழ்ச்சியில் பேசிய விவரங்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback