Breaking News

பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயற்சித்த நபர் அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயற்சித்த நபர் அதிர்ச்சி வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் சுண்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டஸ் மார்ட்டின் (47). இவர், அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், கடந்த 5-ம் தேதி மாலை வேறு ஒருவருக்கு சொந்தமான 1 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு மாற்ற கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக கூறிய சார்பதிவாளர் ஹரி கிருஷ்ணன் (35) அந்த நிலத்தை பதிவு செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் மீண்டும் கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மது போதையில் வந்த ஜஸ்டஸ் மார்ட்டின், சார் பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்துள்ளார்.

மேலும், தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிறிய பாட்டிலில் இருந்து பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டார். தொடர்ந்து, அரிகிருஷ்ணன் மீதும், அருகே இருந்த பணியாளர் மீதும் பெட்ரோலை ஊற்றி, தீக்குச்சியை உரசி சார் பதிவாளர் மீது வீசியுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக தீக்குச்சியில் தீப்பிடிக்காததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

இதனை பார்த்து அங்குள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக் கொண்டு மது போதையில் இருந்த ஜஸ்டஸ் ஜெஸ்டினை மடக்கி பிடித்துள்ளனர். அவர்கள் உடனடியாக கருங்கல் போலீசாருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 

இதுகுறித்து கருங்கல் போலீஸார் விசாரணை நடத்தி, ஜஸ்டஸ் மார்ட்டின் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். 

சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயலும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1865617202587812152

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback