சத்தீஸ்கர் மாநிலத்தில் காரின் அடியில் சிக்கிய கன்றுகுட்டி காரை துரத்தி சென்று நடுவில் நிறுத்தி கன்றை காப்பாற்றிய மாடுகள் வைரல் வீடியோ
சத்தீஸ்கர் மாநிலத்தில் காரின் அடியில் சிக்கிய கன்றுகுட்டி காரை துரத்தி சென்று நடுவில் நிறுத்தி கன்றை காப்பாற்றிய மாடுகள் வைரல் வீடியோ
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்கரில் கார் சாலையில் சென்ற கன்று குட்டி மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் 200 மீட்டர் தூரம் கன்று குட்டியை கார் இழுத்துச் சென்றது. உடனே அங்கிருந்த மாடுகள் வாகனத்தை சுற்றி வளைத்து நிறுத்தின. கார் நின்றதும் மாடுகள் காரை சுற்றியே வந்தது.
உடனே அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து ஒன்று சேர்ந்து காரை தூக்கி அடியில் சிக்கி இருந்த கன்றுக்குட்டியை மீட்டனர். அந்த கன்று குட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1871088473886839002
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ