புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு மறு தேதி அறிவிப்பு முழு விபரம்
அட்மின் மீடியா
0
புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு மறு தேதி அறிவிப்பு முழு விபரம்
பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, ஜனவரி 2 முதல் 10ம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது
பெஞ்சல்' புயலால் காரணமாக கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
அப்பள்ளிகளில் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, ஜனவரி, 2 முதல் 10ம் தேதி வரை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்