நாடாளுமன்ற மோதல் விவகாரம் ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்த டெல்லி காவல் துறை முழு விபரம்
நாடாளுமன்ற மோதல் விவகாரம் ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்த டெல்லி காவல் துறை முழு விபரம்
பாராளுமன்ற வளாகத்தில் நடந்த அமளியின் போது உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி பா.ஜ.க. புகார் அளித்த சில மணி நேரங்களில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.அதன்படி ராகுல் காந்தி மீது
சட்டப்பிரிவு 115 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்),
சட்டப்பிரிவு 117 (தன்னிச்சையாக கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்),
சட்டப்பிரிவு 125 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவது),
சட்டப்பிரிவு 131 (குற்ற சக்தியைப் பயன்படுத்துதல்),
சட்டப்பிரிவு 351 ஆகியவற்றின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உரையாற்றியதை எதிர்த்து பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பா.ஜ.க. எம்.பி.க்கள் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி.க்கள் அளித்த புகாரின் பேரில் தான் டெல்லி காவல் துறையினர் ராகுல் காந்திக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்