Breaking News

சிரியாவில் அதிபா் அல்-அஸாத் ஆட்சி கவிழ்ப்பு ஆட்சியை கைப்பற்றிய போராளி குழுக்கள் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சிரியாவில் அதிபா் அல்-அஸாத் ஆட்சி கவிழ்ப்பு ஆட்சியை கைப்பற்றிய போராளி குழுக்கள் நடந்தது என்ன முழு விவரம்



மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவந்த நிலையில் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கிளர்ச்சியாளர்கள் மெல்லமெல்ல முன்னேறி தற்போது தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றினர். 

HTS என அழைக்கப்படும் ஹயாத் தஹ்ரிீர் அல் ஷாம் என்ற கிளர்ச்சிப் படையும் சிரியன் தேசிய ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழுவும் இணைந்து அசாத்தின் கால் நூற்றாண்டு ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளன. இதையடுத்து சிரியாவில் 13 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ளது.

1971-ஆம் ஆண்டுமுதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த அல்-அஸாத்தின் குடும்ப ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, அல்-அஸாத் நாட்டைவிட்டு வெளியேறினாா். இத்தகவல் வெளியானதைத் தொடா்ந்து மக்கள் வீதிகளில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

சிரியாவில் அந்நாட்டு அதிபர் அரசுக்கு எதிராக பல அமைப்புகள், போராளிகள் போராடி வருகின்றன. அதில் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) அமைப்பின் தலைமையின் கீழ் கிட்டத்தட்ட 10 குழுக்கள் போராடி வருகின்றன. அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) உருவாக்கப்பட்ட போராட்ட குழு அங்கே வெற்றி அடைந்து உள்ளது. இது கிட்டத்தட்ட மிகப்பெரிய அரபு புரட்சியாக பார்க்கப்படுகிறது.

ஆட்சியை கைப்பற்றியவுடன் புரட்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அனைத்துக் கைதிகளும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கிளா்ச்சிப் படையினா் அரசுத் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தனா்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback