Breaking News

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை அருகே சென்ற இளையராஜா தடுத்து நிறுத்தம்.. பரபரப்பு வீடியோ!

அட்மின் மீடியா
0

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து 'இசைஞானி' இளையராஜாவை ஜீயர் வெளியில் நிற்கச் சொன்னதால் பரபரப்பு 


அர்த்த மண்டக படியின் அருகே நின்றபடி கோயில் நிர்வாகம் அளித்த மரியாதை ஏற்றார்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பிரபலமானது. இக்கோவிலுக்கு  இசைஞானி இளையராஜா இன்று தரிசனத்திற்க்கு சென்றார், அப்போது அவர் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் நுழைந்தபோது அவர் தடுக்கப்பட்டார், அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இந்நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1868511288307142960

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback