Breaking News

பொதுக்குழுவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் - விருப்பம் இல்லாவிட்டால் விலகலாம்.. ராமதாஸ் ஆவேசம்! பனையூர் அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம் அன்புமணி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பொதுக்குழுவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் விருப்பம் இல்லாவிட்டால் விலகலாம்.. ராமதாஸ் ஆவேசம்! 

பனையூரில் அலுவலகத்தை அமைத்துள்ளேன் என்னை அங்கு வந்து சந்திக்கலாம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

புதுச்சேரியில் இன்று நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் வெடித்திருக்கிறது. 

பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக மூத்த மகள் காந்தியின் மகன் பரசுராமன் முகுந்தனை அறிவித்த போது அன்புமணி கடும் எதிர்ப்பு. இது குறித்த அறிவிப்பை இன்று புதுவையில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் அறிவித்தார். 

ஆனால் அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது வார்த்தை போராக வெடித்தது. ஒரு கட்டத்தில், நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது என்று ராமதாஸ் எச்சரித்தார்

இதனை தொடர்ந்து மேடையில் ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுகிட்ட அன்புமணி ராமதாஸ் பனையூரில் தன்னுடைய அலுவலகம் இருப்பதாகவும் தன்னை சந்திக்க விரும்புபவர்கள் அங்கே வந்து சந்திக்கலாம் என்றும் கூறினார். இதையடுத்து விருப்பமில்லாதவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளலாம் என ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.

கட்சியை நிறுவியது நான்தான் நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்றும் விருப்பம் இல்லாதவர்கள் வெளியே செல்லலாம் என்றும் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்தார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1872954199333585098

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback