Breaking News

பாதுகாப்பு பணியில் அலட்சியம், செல்ஃபோனில் மூழ்கி கிடக்கின்றார்கள் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் காலை கீழநத்தம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். 

அப்போது, ​​நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருவதற்காக காத்திருந்தபோது, ​​திடீரென 4 பேர் கொண்ட கும்பல் மாயாண்டியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். 

இதில் மாயாண்டிக்கு முகம், கை, கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த வழக்கை தானாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முன் வந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் காவல்துறை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியைவிட தங்களது செல்ஃபோனில் மூழ்கி கிடப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொலையாளியை பிடித்த சிறப்பு எஸ்ஐ உய்கொண்டானுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்ததுடன் சன்மானம் வழங்கவும் பரிந்துரைத்துள்ளனர்.

பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி காவல் ஆணையருக்கு உத்தரவு.

பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்த மற்ற காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தனர்? பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியை விட தங்களது செல்போனில் மூழ்கி கிடப்பதாக நீதிபதிகள் வேதனை

பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்த போலீசார் குறித்து விசாரணை நடத்த நெல்லை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback