பாப்கார்ன், ஆடைகள், பழைய கார்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு முழு விவரம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி . கவுன்சில் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தொடங்கியது. இக்கூட்டத்தில் கோவா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், மேகாலயா மற்றும் ஒடிசா முதலமைச்சர்கள், அருணாச்சலப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா துணை முதலமைச்சர்கள் பங்கேற்றனர் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில்
பாப்கார்னுக்கு 18% வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
பேக்கேஜ் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் பாப்கார்னுக்கு 5% வரியும்,
பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12% வரியும்,
கேரமல் வகை பாப்கார்னுக்கு 18% வரியும் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
அதேபோல் வணிக நிறுனவங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களின் விற்பனை வரி விகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தனிநபர்கள் விற்பனை மற்றும் வாங்குதலுக்கு பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.1000-த்திற்கு மேல் விலை கொண்ட துணிகளுக்கான வரியை 5%ஆக உள்ள வரியை 12 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
மேலும் ரூ.15000-க்கு மேல் விலை கொண்ட ஷூக்களின் வரியை 18% இருந்து 28 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்