வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு! நடந்தது என்ன முழு விவரம்
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு! நடந்தது என்ன முழு விவரம்
விழுப்புரம் அருகே வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.
பெஞ்சல் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் ஆத்திரமடைந்த மக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிச. 03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலின் போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் அப்பகுதிக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வுக்குச் சென்றார். அப்போதுதான், அமைச்சர் பொன்முடி மீது சேற்றைவாரி அடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.
விழுப்புரம் இருவேல்பட்டில் என் மீது சேற்றை அடித்தவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்; வேண்டும் என்றே அரசியல் செய்யப் பேசுகிறார்கள் இதனை நாங்கள் பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை - அமைச்சர் பொன்முடி
நிவாரணம் இரண்டாயிரம் கொடுக்க வேண்டியதை ஆராயிரம் கொடுங்கள் என அண்ணாமலை தெரிவிக்கிறார். அதனை ஒன்றிய அரசிடம் அவரே கேட்டு கொடுக்க சொன்னால் நன்றாக இருக்கும். ஓரிரு நாட்களில் விழுப்புரம் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பும்” என்றார்.
Tags: அரசியல் செய்திகள்