Breaking News

சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்குத் தீவுக்கு தினசரி விமான சேவை தொடக்கம் Chennai To Penang Flight

அட்மின் மீடியா
0

மலேசியாவின் பினாங்குத் தீவுக்கு சென்னையில் இருந்து நாளை முதல் தினசரி விமான சேவை தொடங்குகிறது 

இந்த தினசரி நேரடி விமான சேவைகளை வரும் டிசம்பர் 21 முதல் இண்டிகோ விமான நிறுவனம் துவங்கவுள்ளது.



மலேசியாவில் உள்ள பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட வேண்டும் என பயணிகள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது நாளை முதல் நேரடி விமான சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் இருந்து நேரடி விமான சேவை இருந்து வரும் நிலையில், உள்ள மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான பினாங்கு தீவுக்கு நேரடி விமானம் இயக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது

பினாங்கு தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால், சென்னையில் இருந்து நேரடி விமானம் இயக்கப்பட வேண்டிய அவசியத்தையும் பயணிகள் குறிப்பிட்டு வந்தனர். 

இந்த நிலையில், சென்னையில் இருந்து பினாங்கு நேரடி விமான சேவையை தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதை அடுத்து, நாளை முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை–பினாங்கு தீவு நேரடி விமான சேவையை இயக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback