Breaking News

மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் இலவச பயண டோக்கன் - மாநகர போக்குவரத்து கழகம் தகவல் Free bus pass scheme in tamilnadu for senior citizens

அட்மின் மீடியா
0

மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் இலவச பயண டோக்கன் - மாநகர போக்குவரத்து கழகம் தகவல் Free bus pass scheme in tamilnadu for senior citizens

சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்!சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும்!

டிசம்பர் 21-ம் தேதி முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான பேருந்து பயண டோக்கன்கள் வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 


மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள வருகிற 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.

42 பணிமனைகள், பேருந்து நிலையங்களில் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு. இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, வயதுச் சான்றாக ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றுகளில் ஏதேனும் ஒன்று, 2 வண்ணப் புகைப்படங்களை அளித்து பெற்றுக் கொள்ளலாம்

மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகளில்‌ 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ்‌ மூத்த குடிமக்கள்‌ கட்டணமில்லாமல்‌ பயணம்‌ செய்யும்‌ வகையில்‌, கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள்‌ ஆண்டிற்க்கு இருமுறை வழங்கப்பட்டு வருகின்றது

ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயண டோக்கன், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் 40 மையங்களில் வரும் 21ம் தேதி முதல் 31 ஜனவரி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் வழங்கப்பட உள்ளது. 

கட்டணம் இல்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது கல்வி சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 கலர் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட ஆவணங்களை சரிபார்க்கும் வகையில், அவற்றின் அசல் ஆவணங்களையும் கையில் வைத்து இருக்க வேண்டும். மேலும் புதுப்பிக்க வருகிற மூத்த குடிமக்கள், தங்களுடைய முந்தைய கட்டணம் இல்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும், கொண்டு வர வேண்டும். 

சென்னையில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback