Breaking News

மசூதியில் ஜெய் ஸ்ரீராம் என ஒருவர் முழங்கினால் அது எப்படி குற்றமாகும்? உச்சநீதிமன்றம் கேள்வி How Raising 'Jai Sri Ram' Slogan In Mosque An Offence

அட்மின் மீடியா
0

மசூதியில் ஜெய் ஸ்ரீராம் என ஒருவர் முழங்கினால் அது எப்படி குற்றமாகும்? உச்சநீதிமன்றம் கேள்வி How Raising 'Jai Sri Ram' Slogan In Mosque An Offence

மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் இருவா் மீதான குற்றவியல் விசாரணையை ரத்து செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இக்கேள்வியை முன்வைத்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் மசூதி ஒன்றில் கடந்த செப்டம்பர் 24, 2023 அன்று இரவு சுமார் 10.50 மணியளவில் மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து "ஜெய் ஸ்ரீராம்" கோஷங்களை எழுப்பியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், மசூதிக்குள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புவது வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டாது என்று கூறி போலீசார் தொடுத்த குற்ற வழக்கை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ஹைதா் அலி என்பவா் தாக்கல் செய்த இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை மேற்கொண்டது.

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: 

ஒரு மதம் சாா்ந்த குறிப்பிட்ட வாா்த்தையையோ அல்லது பெயரையோ முழக்கமிடுவது எவ்வாறு கிரிமினல் குற்றமாகும்? 

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 503-இன்கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் பிரிவு, 447-இன்கீழ் குற்றவியல் அத்துமீறல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என உயா்நீதிமன்றம் கூறியுள்ளது மேலும் அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback