Breaking News

IgorKirillov ரஷ்ய அணுசக்தி பாதுகாப்புப் படைத் தலைவர் கிரில்லோ வெடிகுண்டு வைத்து படுகொலை! அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

ரஷ்ய அணுசக்தி பாதுகாப்புப் படைத் தலைவர் கிரில்லோ மாஸ்கோவில் வெடிகுண்டு வைத்து படுகொலை!

அவரது குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் இருந்து குண்டு வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளை தாண்டி நடந்து வருகின்றது

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படை ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்து உள்ளார். 

ரஷ்யாவின் கிரெம்ளினின் தென்கிழக்கில் 7 கி.மீ.,தொலைவில் உள்ள ரியாஷன்ஸ்கி பிரோஸ்பெக்ட் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நடந்த இந்தக் குண்டுவெடிப்பில், ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன, உயிரியல் பாதுகாப்பு படையின் தலைவரான லெப்டினட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்தார்

வெடிகுண்டு ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் வைக்கப்பட்டு இருந்தது எனவும் ரேடியோ சிக்னல் வாயிலாக வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரஷ்ய அதிகாரி கொல்லப்பட்டதற்கு உக்ரைனும் பொறுப்பு ஏற்றுள்ளது. தங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை இகோர் கிரில்லோ பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் தாக்குதலை தொடர்ந்து மூத்த அதிகாரிகள் பாதுகாப்பை ரஷ்யா அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1869053919718240648

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback