தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன முழு விவரம் Is tabla musician Zakir Hussain alive? Isn't it? - What is the official announcement?
தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன முழு விவரம்
தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன முழு விவரம் Is tabla musician Zakir Hussain alive? Isn't it? - What is the official announcement?
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் மரணமடந்தார் ,நுரையீரலை பாதிக்கும் Idiopathic Pulmonary Fibrosis நோய்க்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்தி பரவி வந்தது.
அதன்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
மற்றும் .டைம்ஸ்
ஆஃப் இந்தியா , தி இந்து , எகனாமிக் டைம்ஸ் , ஜீ நியூஸ் , இந்தியா டுடே ,
டெக்கான் ஹெரால்ட் , என்டிடிவி , டைம்ஸ் நவ் , நியூஸ் 18 மற்றும் ரிபப்ளிக்
உள்ளிட்ட பல முக்கிய ஊடகங்களும் ஜாகிர் உசேன் மரணத்துவிட்டார் என செய்திகள் வெளியிட்டன
ஆனால் அவர் உயிருடன் உள்ளார் எனவும் வதந்திகளை நம்பவேண்டாம் என அவரது உறவினர் டிவிட் செய்திருந்தார் https://x.com/AmeerAulia அதில்
My uncle Zakir Hussain is very much alive and we would ask the news
media not to post mis-information. We ask for prayers and we ask for
everyone's well wishes.
எனது மாமா ஜாகிர் உசேன் உயிருடன் இருக்கிறார், தவறான தகவல்களை வெளியிட
வேண்டாம் என்று ஊடகங்களில் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரார்த்தனைகளைக்
கேட்கிறோம், அனைவரின் நல்வாழ்த்துக்களையும் கேட்கிறோம்
Thank you Sir. No death certificate but the media would like to insensitively send information that my Uncle has passed away. Please show the Great man more respect than this. All the amazing things he did for India, please.
நன்றி ஐயா. இறப்புச் சான்றிதழ் இல்லை, ஆனால் ஊடகங்கள் என் மாமா
இறந்துவிட்டார் என்ற தகவலை உணர்ச்சியற்ற முறையில் அனுப்ப விரும்புகின்றன.
தயவு செய்து பெரியவருக்கு இதை விட அதிக மரியாதை காட்டுங்கள்.
இந்தியாவுக்காக அவர் செய்த அனைத்து அற்புதமான செயல்களும், தயவுசெய்து.
I am Zakir Hussain nephew and he has not passed away. We ask for prayers for my Uncle's health. Can you please remove this misinformation. He is in a serious condition and we ask for all his fans around the world to pray for his health
நான் ஜாகீர் உசேன் மருமகன், அவர் இறந்துவிடவில்லை. எனது மாமாவின் ஆரோக்கியத்திற்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். தயவுசெய்து இந்த தவறான தகவலை நீக்க முடியுமா? அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அனைவரும் அவரது உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அதனை தொடர்ந்து நேற்று இரவே பல முன்னனி செய்தி நிறுவனங்களும் அவர் மருத்துவமனையில் உயிருடன் தான் உள்ளார் என செய்திகள் வெளியிட்டார்கள்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் மரணமடைந்தார் என செய்திகள் வலம் வந்தது.மேலும் அவரது உறவினரும் ஜாகிர் உசேன் இறந்துவிட்டார் என டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார் அதில்
இறுதியாக :-
My Uncle - Zakir Hussain passed away a few hours ago. May he reast now in peace.Thank you to everyone who removed any posts of my Uncles early demise. The family appreciate all his fans around the world and anyone who loved and respected him.
எனது மாமா - ஜாகிர் உசேன் சில மணிநேரங்களுக்கு முன்பு காலமானார். அவர் இப்போது நிம்மதியாக இருக்கட்டும். எனது மாமாவின் ஆரம்பகால மறைவு பற்றிய பதிவுகளை நீக்கிய அனைவருக்கும் நன்றி. என அதில் குறிப்பிட்டு இருந்தார்
மேலும் உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் டிசம்பர் 16, 2024 திங்கட்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது மரணமடந்தார் எனவும் இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் ஏற்பட்ட சிக்கல்களால் ஹுசைன் இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் அமெரிக்காவின் பொது ஒலிபரப்பு அமைப்பான நேஷனல் பப்ளிக் ரேடியோ , டிசம்பர் 16 ஆம் தேதி காலை 6 மணியளவில் அவர் காலமானதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து இந்திய பிரதமரும் இந்திய அமைச்சகங்களும், பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இரங்கல் செய்தி
https://x.com/MIB_India/status/1868542966664675423
பிரதமர் மோடி இரங்கல்:-
https://x.com/narendramodi/status/1868544110367560025
முடிவு:-
தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் அவர்கள் அவர் உயிருடன் இருக்கும்போதே 15.12.2024 அன்று அவர் இறந்துவிட்டார் என சில மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டது.
அதற்க்கு ஜாகிர் உசேன் உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர் அதனை தொடர்ந்து ஜாகிர் உசேன் உயிருடன் உள்ளார் என செய்திகள் வெளியானது
இந்நிலையில் தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் அவர்கள் 16.12.2024 அன்று காலை 6 மணியளவில் அமெரிக்காவில் மரணமடைந்தார்.
Tags: FACT CHECK இந்திய செய்திகள் மறுப்பு செய்தி