கலைஞரின் கனவு இல்லம் திட்டம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் Kalaignar Kanavu Illam Scheme
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
தமிழ்நாடு அரசு கலைஞர் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வீடு இல்லாதவர்களுக்கு, நிரந்தரமாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரால், கடந்த 1975ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில், 'கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்' புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, ஊரகப்பகுதிகளை குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அந்தவகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
அதன்படி முதல் கட்டமாக 3500 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் கான்கிரீன்ட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. இதற்கான நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு வீட்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அரசு கொடுக்கும்.
கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் ரூ.3,100 கோடி மதிப்பில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
2024-25ம் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:
இந்த பணம் மொத்தம் 4 பிரிவுகளாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கே நேரடியாக அரசு அனுப்பி வைக்கப்படும்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி வீடு கட்ட கட்டுமான பொருட்களுக்கான சிமெண்ட் மற்றும் கம்பி வழங்கப்படும். ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்