பெப்சி, கொக்ககோலாக்கு போட்டியாக பேரிச்சைபழம் கொண்டு உருவாக்கிய Milaf Cola சவூதியில் அறிமுகம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
பெப்சி, கொக்ககோலாக்கு போட்டியாக பேரிச்சைபழம் கொண்டு உருவாக்கிய Milaf Cola சவூதியில் அறிமுகம் முழு விவரம்
சவூதி அரேபியா நிறுவனம் ஒன்று பேரீச்சம் பழத்தை மூலப்பொருளாக கொண்டு செயற்கை சுவையூட்டி எதுவும் கலக்காமல் இயற்கையான ஒரு பானம் தயாரித்துள்ளனர்
உலகிலேயே முதன் முறையாக Coco Cola வுக்கு மாற்றாக இயற்கை பானமான MilafCola சவூதியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
துராத் அல் மதினா என்ற நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக சவூதி அரேபியா பேரிச்சம் பழத்தை அடிப்படை பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு பானத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மிலாஃப் கோலா என சவுதி அரேபியா பெயர் சூட்டியுள்ளது.
மற்ற பானங்களில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுகிறது உடல் நலத்திற்கு கேடு ஆனால் அதே சுவையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த பானம் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா பொது முதலீட்டு நிதியம் என்று அழைக்கப்படும் அரசு சார்ந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான துராத் அல் மதினா என்ற நிறுவனம் தான் இந்த பானத்தை தயாரித்துள்ளது.
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்