Breaking News

கியூ ஆர் கோடு வசதியுடன் அதிநவீன புதிய பான் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி new pan 2.0 card apply online

அட்மின் மீடியா
0

கியூ ஆர் கோடு வசதியுடன் அதிநவீன புதிய பான் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), PAN 2.0 முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், 

தற்போதுள்ள பான் கார்டு முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இது வரி செலுத்துவோருக்கு மிகவும் திறமையாகவும் பயனர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும். 1,435 கோடி பட்ஜெட்டில், தற்போதைய PAN/TAN முறையை மேம்படுத்துவதன் மூலம் பயனர்களுக்கு தடையற்ற டிஜிட்டல் அனுபவத்தை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இந்தியாவில் விரைவில் க்யூஆர் கோட் அம்சங்கள் நிறைந்த புதிய பான் கார்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தெரிவித்துள்ளார். புதிய கார்ட் விரைவான ஸ்கேன்களுக்கான QR குறியீட்டுடன் வரும்  என வைஷ்னாவ் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள பான் அட்டையில், எண் மற்றும் எழுத்தில் 10 இலக்க அடையாள குறியீடு உள்ளது. இதனை கியூஆர் கோடாக மாற்றுவதன் மூலம், வரி செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் சேவை மேம்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியா 78 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகளை வழங்கியுள்ளது, அவற்றில் 98% தனிநபர்களிடம் உள்ளது. தற்போதைய முறை வரி செலுத்துவோருக்கு சிறப்பாக சேவை செய்தாலும், நவீன வரி செயல்முறைகளை கையாள தேவையான மேம்பட்ட தொழில்நுட்பம் இதில் இல்லை.

PAN 2.0 முன் முயற்சியானது, முழு அமைப்பையும் மேம்படுத்துவதன் மூலமும், வரி செலுத்துவோர் பதிவுக்கான சேவைகளை மேம்படுத்துவதன் மூலமும் இந்தச் சிக்கல்களைத் தீர்க்கிறது. இது மின் ஆளுமையை நோக்கிய ஒரு படியாகும் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.

புதுப்பிக்கப்பட்ட PAN 2.0 அமைப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை

புதிய பான்கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க:-

ஏற்கெனவே பான் கார்டு வைத்துள்ளவர்கள் புதிய பான் கார்டிற்கு விண்ணப்பிக்க வேண்டாம்... பான் கார்டு ரீ-பிரின்ட்டிற்கு மட்டும் விண்ணப்பித்தால் போதுமானது. 

PAN card வைத்திருப்பவர்களுக்குதற்போது PAN card உடன் புதிதாக QR code வசதியுடன் PAN 2.0 என்ற புதிய பான் கார்டு  ரூபாய் 50 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்..இதை எப்படி விண்ணப்பிப்பது என்றுபார்ப்போம்..

ஏற்கனவே பான்காடு வைத்திருப்பவர்கள், 

என்எஸ்டிஎல் மூலமாக வாங்கி இருந்தால் 

https://onlineservices.nsdl.com/paam/ReprintEPan.Html?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH 

என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

யுடிஐஐடிஎஸ்எல் மூலம் பான்கார்டு பெற்று இருந்தால் 

https://www.protean-tinpan.com/

ன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் மேல் உள்ள இணையதளம் சென்று அதில் பான்கார்டு ரீ பிரிண்ட் என்பதை கிளிக் செய்யவும்:-

அடுத்து வரும் பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் பான், ஆதார், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து 'சப்மிட்' கொடுக்கவும்.

அடுத்து இ-மெயில், அல்லது மொபைல் போன் தேர்வு செய்து  OTP வர வேண்டும் என்பதைத் தேர்வு செய்து ஓடிபியை பதிவிடுங்கள்

அடுத்து ஓடிபி பதிவு செய்தப்பின், ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.அதன் பின் வரும், ஒப்புகைச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

அடுத்த 24 மணி நேரத்தில், அதே வலைதளத்தில், நீங்கள் உங்களது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

7 முதல் 10 நாட்களில் புதிய பான் அட்டை உங்கள் வீட்டிற்கு வந்துவிடும்.

Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback