சம்பல் பகுதி வன்முறை மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய போலீசார்..உ.பி யில் பரபரப்பு Rahul Gandhi to visit Sambhal
உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் மசூதியை ஆய்வு சென்ற இடத்தில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் பலியான மக்களுக்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை உ.பி. போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தி போலீஸார் குவிக்கப்பட்டு, சாலையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் முகலாய காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. பாரம்பரிய மிக்க ஹிந்து கோயிலை இடித்து ஜாமா மசூதி கட்டப்பட்டதாக உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான விஷ்ணு சங்கா் ஜெயின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் சிவில் நீதிமன்றம் மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்ய இரண்டாவது முறையாக ஆய்வுக் குழுவினர் சென்ற போது மசூதி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து, மசூதியில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சம்பல் மாவட்டத்திற்கு காரில் சென்ற போது உத்தரபிரதேச எல்லையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
காசியாபாத் எல்லையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் காங்கிரசார் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. மேலும், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்