Breaking News

கேன்சர் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவிப்பு Russia announces it has developed a cancer vaccine, free for all citizens

அட்மின் மீடியா
0

ரஷ்ய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கிடைக்கும், எனவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து இருந்தார்.Russia announces it has developed a cancer vaccine, free for all citizens



இந்நிலையில் புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது 2025ம் ஆண்டு முதல் நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.

மேலும்  ரஷ்யா சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கூறியதாவது: புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக என்.ஆர்.என்.ஏ., தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.

புற்றுநோய் தடுப்பூசியின் முன் மருத்துவ பரிசோதனைகள், கட்டி வளர்ச்சி மற்றும் சாத்தியமான மெட்டாஸ்டேஸ்களைத் தடுக்கும் என்று காட்டுகின்றன என்று கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் தெரிவித்தார். தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்குவதற்கான நேரத்தை வெகுவாகக் குறைப்பதில் செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் சாத்தியமான ஈடுபாட்டை ஜின்ட்ஸ்பர்க் வலியுறுத்தினார்.

ஆண்டுதோறும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால், புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புற்றுநோய் என்றால் என்ன:-

புற்றுநோய் என்பது உடலின் செல்களில் ஏற்படும் ஒரு நோயாகும். நம் உடலில் பல்வேறு வகையான செல்கள் உள்ளன, பொதுவாக உடலில் செல்கள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வளர்ந்து பெருகும், 

அவை இயல்பான செயல்பாட்டை பராமரிக்க ஒரு நாளில் பல முறை வளர்ந்து பெருகும். எப்போதாவது இந்த உயிரணுப் பிரிவு பாதிக்கப்பட்டு ஒரு தவறான செல் அல்லது ஒரு அசாதாரண செல் உருவாக்குகிறது - இந்த செல்கள் புற்றுநோய் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் புற்றுநோயில் பல வகைகள் உள்ளது

எபிட்டிலியம் அல்லது ஒரு உறுப்பை மூடுவதால் ஏற்படும் புற்றுநோய் கார்சினோமா என அழைக்கப்படுகின்றது

இணைப்பு அல்லது துணை செல்களிலிருந்து எழும் புற்றுநோய் எ.கா: (எலும்பு, தசை) - சர்கோமா  என அழைக்கப்படுகின்றது

இரத்தத்தை (எலும்பு மஜ்ஜை) உற்பத்தி செய்யும் உயிரணுக்களிலிருந்து எழும் புற்றுநோய் - லுகேமியா  என அழைக்கப்படுகின்றது

நோயெதிர்ப்பு மண்டலத்தின் உயிரணுக்களிலிருந்து எழும் புற்றுநோய் - லிம்போமா மற்றும் மைலோமா  என அழைக்கப்படுகின்றது

நரம்பு மண்டலத்திலிருந்து எழும் புற்றுநோய் - ஆஸ்ட்ரோசைட்டோமா, க்ளியோமா

Russia claims to have developed cancer vaccine, to be free

Give Us Your Feedback