Breaking News

சவுக்கு சங்கர் மீண்டும் கைது முழு விபரம் savukku shankar arrested

அட்மின் மீடியா
0

யூடியூபர் சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் சென்னையில் கைது செய்தனர் 

தேனி கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், கைது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனியில் ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் ஆகியோர் மீது  7 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, 

இந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஜூலை மாதம் நிபந்தனை ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகவில்லை. இது குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

இந்நிலையில், சென்னையில் போலீசார் அவரை கைது செய்து தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்றனர்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback