வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைக்கு பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் தமிழக அரசு tamilnadu local body election
வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைக்கு பின்னரே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.வரும் 5ஆம் தேதியுடன் ஊரக உள்ளாட்சி நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் பாராளுமன்றம், சட்டமன்றம் போன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ந்தேதி என 2 கட்டங்களாக நடந்தது.
இதில் 91,975 ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள் (515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் இவர்களின் பதவிக்காலம், வரும் 05.01.2025 அன்று முடிவடைகிறது.
இந்நிலையில் பல மாவட்டங்களில் கிராம ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்படுவதாகவும் அதனால், வார்டு மறுவரைப் பணிகள் நடைபெற உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல்கள் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது
இந்நிலையில் வார்டு மறுவரை பணிகள் காரணமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது
வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடிக்க உத்தரவிடக் கோரி, முனியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எஸ்.சுந்தர் மற்றும் பி.தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ஆகியோர், வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது என உத்தரவாதம் அளித்தனர்.மிழ்நாடு அரசின் உத்தரவாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
எனவே பதவி காலம் முடியும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமனம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்