Breaking News

பாம்புக்கு இருப்பது போல் நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ போட்டு, அதனை வீடியோவாக வெளியிட்ட 2 பேர் கைது Two held for promoting tattoos by splitting tongues

அட்மின் மீடியா
0

பாம்புக்கு இருப்பது போல்  நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ போட்டு, அதனை வீடியோவாக வெளியிட்ட 2 பேர் கைது

மாடிஃபிகேஷன் கல்ச்சர் என நாக்கை இரண்டாக வெட்டி ஏலியன் போல் டாட்டூ குத்தும் நபர் அதிரடியாக கைது செய்த போலீசார் Trichy tattoo shop owners held for illegal split tongue surgery

திருச்சி மாநகரம் வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன், இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் கடை நடத்தி வந்துள்ளார். 

உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைவது உள்ளிட்டவற்றை செய்து வந்த அவர் டிரெண்டிங்கிற்காக பாம்பு, ஓநாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு இருப்பது போல் மனிதர்களுக்கும் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறையை செய்வதாக கூறி விளம்பரம் செய்து வந்துள்ளார். 

மேலும் அவர் தன்னுடைய நாக்கு பிளவுப்படுத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அதனை பார்த்த சிலர் அவரிடம் சென்று தங்களுக்கான நாக்கை பிளவுபடுத்தி கொண்டுள்ளனர். அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்

இதுகுறித்து அறிந்த திருச்சி மாநகர போலீசார் அவருடைய இன்ஸ்டாகிராம்பக்கத்தை முழுமையாக ஆய்வு செய்து, அது குறித்து விசாரணை செய்ததில் அவர் உரிய அனுமதி இன்றி நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து ஹரிஹரனையும் அவர் கடையில் பணியாற்றிய ஜெயராமன் என்பவரையும் திருச்சி மாநகர கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback