ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Union Cabinet approves One Country One Election System
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்! அனைத்து மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இச்சட்டம் வகை செய்யும். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கும் மாநில சட்ட மன்ற தேர்தலுக்கும் பல ஆண்டுகால இடைவெளிகளில் தேர்தல் நடக்கிறது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இதனையடுத்து, லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.
ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்து பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது
ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்