புறநகர் ரயில், மற்றும் முன்திவில்லாத ரயில் பயண டிக்கெட்டை UTS APP மூலமாக டிக்கெட் எடுத்தால் 3% சலுகை தெற்கு ரயில்வே அறிவிப்பு
புறநகர் ரயில், மற்றும் முன்திவில்லாத ரயில் பயண டிக்கெட்டை UTS APP மூலமாக டிக்கெட் எடுத்தால் 3% சலுகை தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க, முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க UTS APP பயன்படுத்தி, R-Wallet மூலமாக டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது
சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க, முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க ரயில் நிலைய கவுன்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், யுடிஎஸ் மொபைல் ஆப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது.
ரயில் பயணிகள் R-Wallet பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்) மூலம் டிக்கெட் எடுத்தால் 3% கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, ஆப் மூலம் எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UTS மொபைல் செயலியில் உள்ள R-Wallet அல்லது ATVM மூலம் டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி