பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் மரணமடந்தார் முழு விவரம் Zakir Hussain Passes Away
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் மரணமடந்தார் முழு விவரம்
நுரையீரலை பாதிக்கும் Idiopathic Pulmonary Fibrosis நோய்க்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர்
ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நுரையீரல் பிரச்சினையின் காரணமாக உயிரிழந்தார்.” என்று தெரிவித்துள்ளனர்.
உஸ்தாத் ஜாகிர் உசேன் 1951-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மும்பையில் பிறந்தார். தனது தந்தையின் ஆசைப்படியே, தபேலா இசையில் தனி முத்திரை பதித்தார்.
இவர் இந்தியாவின் பத்மஸ்ரீ விருதை 37 வயதில் பெற்றார். 1992-ல் ‘கிராமி’ விருது பெற்றார்.
பாராம்பரிய இசைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் கலை மற்றும் பண்பாட்டு ஃபெலோஷிப் பெற்றவர். 2023 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றார்.
Tags: இந்திய செய்திகள்