Breaking News

ஜனவரி 1 முதல் இந்த வங்கிக் கணக்குகள் ரத்து - ரிசர்வ் வங்கி உத்தரவு முழு விபரம்

அட்மின் மீடியா
0

ஜனவரி 1 முதல் இந்த வங்கிக் கணக்குகள் ரத்து - ரிசர்வ் வங்கி உத்தரவு முழு விபரம்

செயல்பாட்டில் இல்லாத மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூடுவதற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை

3 வகையான வங்கிக் கணக்குகள் மூடல் 

1. பயன்பாட்டில் இல்லாத கணக்குகள்

இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எவ்வித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் பயன்பாட்டில் இல்லாத கணக்காக வகைப்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து 2 ஆண்டுகளாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கிக் கணக்கு டார்மெண்ட் கணக்கு என்று அழைக்கப்படுகிறது. 

இந்த கணக்குகளை குறிவைத்து சைபர் மோசடி நடத்தப்படுகிறது. அதனால், இந்த வகை கணக்குகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

2. செயலற்ற கணக்குகள்

12 மாதங்களுக்கு மேலாக எந்தவித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக வகைப்படுத்தப்படுகிறது.இந்த வகை கணக்குகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

3 . இருப்புத் தொகை இல்லாத கணக்குகள்

நீண்ட நாள்களாக இருப்புத் தொகை இல்லாமல் இருக்கும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு களை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக ஜீரோ பேலன்ஸ் இருக்கும் வங்கிக் கணக்கிகள் மூடப்படவில்லை. பெரும்பாலான மக்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அனைத்தையும் எடுத்துவிடுகின்றனர். அதன் பின்னர் எந்த பரிவர்த்தனையையும் செய்வதில்லை. பல காலமாக ஜீரோ பேலன்ஸ் இருக்கும். இந்த மாதிரியான கணக்குகள் இனி மூடப்படும்.

மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமானால், வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளையை நேரடியாக அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback