Breaking News

அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சேலம் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் விலகல்

அட்மின் மீடியா
0

அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சேலம் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகல்




சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன், சேலம் மாநகர மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் வசந்தகுமார் சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன், 

ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின் 

உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். 

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலாளர் சேலம் மா.பா.அழகரசன் ஆகிய நான் மற்றும் சேலம் மாநகர் மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் வசந்தகுமார், சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன். ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின் மற்றும் எங்களுடன் பயணித்த 100 க்கும் மேற்ப்பட்ட உறவுகளும் இன்று முதல் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிந்தும் விலகிக் கொள்கிறோம். இதுநாள் வரை ஒத்துழைப்பு நல்கிய உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தக்கட்ட அரசியல் பயணம் குறித்து தோழர்களுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும். நன்றி...

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback