மகளிர் உரிமைத் தொகை 1000 பெற புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களில் 1000 வழங்கப்படும் -உதயநிதி
மகளிர் உரிமைத் தொகை 1000 பெற புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களில் 1000 வழங்கப்படும் -உதயநிதி
தமிழக சட்டப்பேரவியின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு இனிமேல் விண்ணப்பித்தால் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மகளிர் உரிமைத் தொகையை செயல்படுத்தும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.அப்போது அவர் பேசியதாவது
திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்த 5.27 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 76 சதவீதம் அதாவது 4 லட்சத்து 897 மகளிர் மாதம் உரிமைத்தொகை பெற்று வருகிறார்கள்.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு என சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில், 70 சதவீத விண்ணப்பங்கள் அதாவது ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண்ணப்பங்கள் முதற்கட்டமாக ஏற்கப்பட்டன.
முதலமைச்சர் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் சுமார் 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் ஒரு கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளன.
தற்போது விடுபட்டவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் முதல்வருக்கு கொண்டு சென்றுள்ளோம். 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
முதல்வர் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை விரைவில் வழங்கிட மூன்று மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்” என்று கூறினார்.
.அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: அரசியல் செய்திகள்