Breaking News

உத்திரமேரூர் ஏரியில் முகம் மட்டும் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் 12 ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் உடல் ஏரியில் மீட்பு நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

உத்திரமேரூர் ஏரியில் முகம் மட்டும் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் 12 ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் உடல் ஏரியில் மீட்பு நடந்தது என்ன முழு விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களின் சடலம் முகம் எரிக்கப்பட்ட நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே காட்டாங்குளம் ஊராட்சியில் விழுதவாடி என்ற கிராமம் உள்ளது. அதற்கு அருகே உள்ள ஏரிக் கரையில் மூன்று உடல்கள் மிதப்பதாக பகுதி மக்கள் உத்தரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்தவுடன் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மற்றும் உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டது. 

மேலும் 3 சடலங்களின் முகங்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணை அடிப்படையில் அவர்கள் 3 பேரும் பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த பரத்,17, சத்ரியன்,17, விஷ்வா,17, ஆகிய 3 பேரும் வாலாஜாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களது உடலை போலீசார் உடற் கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முன்விரோதம் காரணமாக மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback