Breaking News

தமிழக வெற்றிக்கழகம் 120 மாவட்ட செயலாளார்கள் நியமனம் முழு பட்டியல் இணைப்பு tvk party district secretary list 2025

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழகம் 120 மாவட்ட செயலாளார்கள் நியமனம் முழு பட்டியல் இணைப்பு tvk party district secretary list 2025

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார். தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதற்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது. முதற்கட்டமாக 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள், துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “ தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் M.சிவக்குமார் M.sc அவர்கள் நியமனம்

ராணிப்பேட்டை  மாவட்டம் கிழக்கு V.காந்திராஜ் B.A  அவர்கள் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்டம் மேற்கு G.மோகன்ராஜ் அவர்கள் நியமனம்

ஈரோடு மாவட்டம் கிழக்கு M.வெங்கடேஷ் B.E, MBA அவர்கள் நியமனம்

ஈரோடு மாவட்டம் மாநகர் M.பாலாஜி B.com அவர்கள் நியமனம்

ஈரோடு மாவட்டம் மேற்கு A.பிரதீப் குமார் DCE அவர்கள் நியமனம்

கடலூர் மாவட்டம் கிழக்கு H.ராஜ்குமார் DME அவர்கள் நியமனம்

கடலூர் மாவட்டம் தெற்கு S.சீனுவாசன் அவர்கள் நியமனம்

கடலூர் மாவட்டம் மேற்கு S.விஜய் B.A  அவர்கள் நியமனம்

கடலூர் மாவட்டம் வடக்கு K.ஆனந்த் B.E Mech அவர்கள் நியமனம்

கரூர் மாவட்டம் கிழக்கு G.பாலசுப்ரமணி அவர்கள் நியமனம்

கரூர் மாவட்டம் மேற்கு V.P.மதியழகன் அவர்கள் நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கிழக்கு R.பரணிபாலாஜி B.A, LLB அவர்கள் நியமனம்

கோவை மாவட்டம் தெற்கு K.விக்னேஷ் அவர்கள் நியமனம்

கோவை மாவட்டம் மாநகர் V.சம்பத்குமார் MBA அவர்கள் நியமனம்

சேலம் மாவட்டம் மத்திய மண்டலம் A.பார்த்திபன் அவர்கள் நியமனம்

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் C.மதன் அவர்கள் நியமனம்

தஞ்சாவூர் மத்திய மாவட்டம் R.விஜய் சரவணன் BBA அவர்கள் நியமனம்

நாமக்கல் மேற்கு மாவட்டம் N.சதிஷ்குமார்அவர்கள் நியமனம்

மாவட்ட செயலாளர்கள் பட்டியல் பார்க்க டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&e=2&st=75kfq593&dl=0




















Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback