கோவில் திருவிழாவில் மிரண்டு ஓடிபக்தரை தூக்கி சுழற்றி வீசிய யானை – 21 பேர் காயம்! அதிர்ச்சி வீடியோ
கோவில் திருவிழாவில் மிரண்டு ஓடிபக்தரை தூக்கி சுழற்றி வீசிய யானை – 21 பேர் காயம்! வைரல் வீடியோ
கேரள மாநிலம் மலப்புரம் அருகே திருவிழாவில் யானை மிரண்டு தாக்கியதில் 20க்கும் மேற்பட்டோர் பேர் காயம், 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கேரள மாநிலம் மலப்புரம் புதியங்கடி திரூரில் புத்தாண்டு விழாவில் யானை திடீரென மிரண்டது. அப்போது அந்த யானை சில பக்தர்களை துப்பிக்கையால் பிடித்து தூக்கி சுழற்றி எறிந்தது.இதனால் கோவில் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்ததால் விழா நடந்த மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேற முடியாமல் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்
கூட்ட நெரிசலில் சிக்கி 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யானையை தூக்கி வீசியவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1876880359566016886
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ