பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியில் தங்க புதையல்.. டன் டன்னாக 32 கிமீ தொலைவுக்கு குவிந்து கிடக்கும் தங்கம் முழு விவரம் Pakistan Gold Indus River
பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியில் தங்க புதையல்.. டன் டன்னாக 32 கிமீ தொலைவுக்கு குவிந்து கிடக்கும் தங்கம் முழு விவரம்
பாகிஸ்தானின் புவியியல் ஆய்வு மையம் நடத்திய ஆராய்ச்சி மூலம் தங்கம் புதையல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாபின் முன்னாள் சுரங்க அமைச்சர் இப்ராஹிம் ஹசன் முராத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பழமையான மற்றும் நீண்ட நதிகளில் ஒன்றாக சிந்து நதி உள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் கி.மு., 3,300 மற்றும் 1,300க்கு இடையே அதன் கரையோரங்களில் செழித்து வளர்ந்தது. நாடு பிரிவினைக்கு முன்னர் இந்த நதி இந்தியாவிற்கு சொந்தமானதாக இருந்தது. தற்போது, அந்த நதி இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் சொந்தமானதாக உள்ளது. நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டெக்டானிக் பிளேட்டுகள் மோதி மலைகள் உருவாகும் போது, அரிப்பு காரணமாக தங்கத் துகள்கள் உருவாகி இருக்கலாம் என்றும் அவை சிந்து நதியின் வேகத்தில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அவை, சிந்து மற்றும் காபூல் ஆறுகள் இணையும் இடத்தில் பல நூறு ஆண்டுகளாக குவிந்து புதைந்து போயி உள்ளதாகவும் இது பாகிஸ்தானின் அட்டோக்கிலிருந்து தர்பேலா மற்றும் மியான்வாலி வரை 32 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த தங்க புதையல்கள் பரவி கிடப்பதாக சொல்லப்படுகிறது
இது குறித்து தகவல் அறிந்த மக்கள் சிந்து நதி பகுதிக்கு படையெடுக்கத் துவங்கினர். குறிப்பாக குளிர்காலத்தில் நதியில் தண்ணீர் மட்டம் குறைவாக இருக்கும் என்பதால், ஏராளமானோர் கனரக இயந்திரங்களைக் கொண்டு தோண்டி தங்கத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இது சட்டவிரோதம் என்பதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், 127 இடங்களில் மாதிரிகள் எடுத்து பாகிஸ்தானின் புவியியல் ஆய்வு மையம் நடத்திய ஆராய்ச்சி மூலம் தங்கம் புதையல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாபின் முன்னாள் சுரங்க அமைச்சர் இப்ராஹிம் ஹசன் முராத் தெரிவித்துள்ளார்.
32.6 மெட்ரிக் டன் தங்கம் புதைந்து புதைந்துள்ளதாக சர்வதேச சந்தையில் இந்த தங்கத்தின் இருப்பு மதிப்பு பிகேஆர் 600-700 பில்லியன்" என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தங்கத்தின் மதிப்பு, அந்நாட்டு பண மதிப்பில் 60 ஆயிரம் கோடி இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Tags: வெளிநாட்டு செய்திகள்