50 % மானியத்தில் புதிய மின்மோட்டார் பம்பு செட் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
50 % மானியத்தில் புதிய மின்மோட்டார் பம்பு செட் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தவும் பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும் நிலத்தடி நீர் பாசனத்தில் மின் மோட்டார் பம்பு செட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகரிக்கிறது.மேலும் மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைகிறது.
இத்திட்டத்தின் கீழ் புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.
மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள் நோக்கங்கள்
மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல்.
அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல்.நிதி ஆதாரம் ஒன்றிய மற்றும் மாநில அரசு நிதிமானியங்களும், சலுகைகளும்
புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50 % இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு அல்லது அமைக்கப்படும் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள்அமைப்பதற்கு மானியம் வழங்குதல்.தகுதி
5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்குதல். தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் ஏற்கனவே நுண்ணீர்ப்பாசனம் நிறுவியுள்ள விவசாயிகள், அல்லது தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர்ப்பாசனம் அமைத்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் மட்டும் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.தேர்வு செய்தல்
சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை.
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்