காஸாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதல்களில் 71 பேர் பலி! 200 பேர் காயம் முழு விவரம்
காஸாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதல்களில் 71 பேர் பலி! Israeli attacks kill at least 80 in Gaza after ceasefire deal announced
காஸா நகரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 71 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது.இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு மத்தியிலான போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் பரிமாற்றம் ஆகிய ஒப்பந்தங்கள், கத்தார் நாட்டின் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) முதல் காஸா மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்த காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மற்றும் உலகளவிலுள்ள அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
நேற்று (ஜன.15) இரவு அந்த கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு பாலஸ்தீனர்கள் அவர்களது வீடுகளுக்கும் முகாம்களுக்கும் திரும்பியபோது இஸ்ரேல் காஸாவின் மீதான அதன் தாக்குதலை மீண்டும் தொடர்ந்தது.
வடக்கு காஸா பகுதி, ஷெயிக் ரட்வான் குடியிருப்புப் பகுதி, மத்திய காஸா ஆகிய இடங்களில் இஸ்ரேல் நடத்திய தரைவழி, வான்வழி மற்றும் டிரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 71 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
ஞாயிற்றுக்கிழமை போர்நிறுத்தம் தொடங்கும் என்று பாலஸ்தீனியர்கள் பதற்றத்துடன் காத்திருந்த நிலையில், காசா நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் காசா நகரின் ஷேக் ரத்வான் பகுதியில் இருந்து 12 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக பாலஸ்தீன சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது.
மத்திய காசாவில், புரேஜ் முகாமில் உள்ள கராஜ் பகுதியில் மக்களைக் குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை மாலை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் செய்தியை சுருக்கமாக கொண்டாடிய பின்னர் பாலஸ்தீனியர்கள் தங்கள் கூடாரங்களில் தங்குமிடம் திரும்பியதால், புதன்கிழமை விடியற்காலையில் இருந்து கணக்கிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.என அல் ஜசிரா செய்தி வெளியிட்டுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்