Breaking News

8ம் வகுப்பு படிப்பவர்கள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் முழு விபரம்

அட்மின் மீடியா
0

கல்வி உதவித் தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் ஜனவரி 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். 

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

அதன்பின் பூர்த்தி செய்த படிவங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஜனவரி 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

இதுகுறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -600 006 

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, பிப்ரவரி -2025 

NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) FEB 2025 செய்திக் குறிப்பு 

2024-2025-ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2025 பிப்ரவரி மாதம் - 22ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது 

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 

உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 22.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 31.12.2024 முதல் 24.01.2025 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் Online கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து, தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.012025. காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு வேலைவாய்ப்பு

Give Us Your Feedback