இஸ்லாத்தை அவமதித்த குற்றத்திற்க்காக புத்த துறவிக்கு 9 மாதம் சிறை இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு Controversial Buddhist monk jailed for insulting Islam
இஸ்லாத்தை அவமதித்த குற்றத்திற்க்காக புத்த துறவிக்கு 9 மாதம் சிறை இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு Controversial Buddhist monk jailed for insulting Islam
இலங்கையில் இஸ்லாத்தை அவமதித்து மத வெறுப்பை தூண்டிய குற்றத்திற்காக புத்த துறவிக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது கலகொடஅத்தே ஞானசார இஸ்லாத்திற்கு எதிராக பல தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஞானசார டிசம்பரில் கைது செய்யப்பட்டார் அதன்பின்பு ஜாமினில் வெளிவந்தார்.
தொடந்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் நேற்று (ஜன.9) அவருக்கு 9 மாதம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. மேலும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,130.45 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையைக் கட்டவில்லை என்றால் சிறைத் தண்டனையில் மேலும் 1 மாதம் அதிகரிக்கக் கூடும் என தீர்ப்பளிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து,இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார மேன்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டில் இறுதித் தீர்ப்பு வரும் வரை அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது இலங்கையில் பௌத்த துறவிகளுக்கு தண்டனை வழங்குவது அரிதாகவே உள்ளது, ஆனால், வெறுப்புக் குற்றங்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டதாக மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்பட்ட ஞானசார சிறையில் அடைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
Tags: வெளிநாட்டு செய்திகள்