Breaking News

நாட்டில் முதல் முறையாக விமானத்தில் வைஃபை வசதி : ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு Air India Free WiFi

அட்மின் மீடியா
0
நாட்டில் முதல் முறையாக விமானத்தில் வைஃபை வசதி : ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு Air India Free WiFi


இதன் மூலம் இந்தியாவில் விமான பயணத்தில் வைபை சேவை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமை ஏர் இந்தியாவிற்கு கிடைத்து உள்ளது.

ஏர் இந்தியா விமானத்தின் ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் ஏ321 நியோ ஆகிய விமானங்களில் வைபை இணையதள சேவையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது. 

மேலும் விமானம் 10,000 அடிக்கு மேல் பறக்கும் போது பயணிகள் வைஃபை  பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது

வைஃபை பயன்படுத்துவது எப்படி:-

விமானத்தில் மொபைல், டேப்லெட் அல்லது லேப்டாப்பில் wifi செட்டிங்கை எடுத்து அதில் Air India Wi-Fi’ network-ஐ தேர்வு செய்யவேண்டும். 

அதில் PNR number மற்றும் கடைசி பெயரை கொடுக்க வேண்டும். 

அவ்வளவுதான் நீங்கள் விமானத்தில் இருந்தபடியே இணைய சேவையை பயன்படுத்தலாம்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback