Breaking News

annamalaiyar temple recruitment 2025 திருவண்ணாமலை கோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு முழு விவரம் annamalaiyar temple recruitment 2025

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அறிவிப்பு  annamalaiyar temple recruitment 2025

திருவண்ணாமலை. அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 28.02.2025 பிற்பகல் 05.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.



1. தட்டச்சர் பணி.

பணியிடம் 1

சம்பளம் 18500-58600

கல்வித்தகுதி- 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி அரசு தொழில்நுட்பத் தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல். 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. காவலர். 

பணியிடம் 70 (ஆண்கள்-60. பெண்கள்-10) 

சம்பளம் 15900-50400

கல்வித்தகுதி- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

3. கூர்க்கா, 

பணியிடம் 2 

சம்பளம் 15900-50400

கல்வித்தகுதி- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

4. ஏவலாள் (பண்ணை சாகுபடி) 

பணியிடம் 2

சம்பளம் 10000-31500

கல்வித்தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

5. உபகோயில் பெருக்குபவர் 

பணியிடம் 2

சம்பளம் 10000-31500

கல்வித்தகுதி- தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

6. கால்நடை பராமரிப்பாளர் 

பணியிடம் 1 

சம்பளம் 10000-31500

கல்வித்தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

7. உபகோயில் காவலர் 

பணியிடம் 2 

சம்பளம் 11600-36800

கல்வித்தகுதி தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

8. திருமஞ்சனம் 

பணியிடம் 3 

சம்பளம் 11600-36800

கல்வித்தகுதி

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.



9. முறை ஸ்தானீகம் 

பணியிடம் 10

சம்பளம் 10000-31500

கல்வித்தகுதி

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

10. ஒடல் பணி, 

பணியிடம் 2

சம்பளம் 15900-50400

கல்வித்தகுதி

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

11. தாளம் பணி, 

பணியிடம் 3

சம்பளம் 18500-58600

கல்வித்தகுதி

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

12. தொழில் நுட்ப உதவியாளர் (மின்னணு மற்றும் தொலை தொடர்பு) 

பணியிடம் 1

சம்பளம் 20600-65500

கல்வித்தகுதி

மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டயப்படிப்பு

13. பிளம்பர் பணி, 

பணியிடம் 1

சம்பளம் 18500-58600

கல்வித்தகுதி

அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் (ITI). குழாய் தொழில் /குழாய் பணியர் ((Plumber Trade) பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள் அனுபவம் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் (Apprenticeship) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

14. உதவி மின் பணியாளர் பணி. 

பணியிடம் 2

சம்பளம் 16600-52400

கல்வித்தகுதி

அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் (ITI) குழாய் தொழில்/ குழாய் பணியர் (Plumber Trade) பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள் அனுபவம் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் (Apprenticeship) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

15. தலைமை ஆசிரியர்

பணியிடம் 1

சம்பளம் 36700-116200

கல்வித்தகுதி

தமிழில் முதுகலைப் பட்டமும், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒரு இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். (B.T. or B.Ed.) ஏதேனும் ஒரு மேனிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். தத்துவம், சமயம் மற்றும் பண்பாடு போன்றவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்

16. தேவார ஆசிரியர் 

பணியிடம் 1

சம்பளம் 35400-112400

கல்வித்தகுதி

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் (மற்றும்) யாதொரு ஆகம் பள்ளி (அல்லது). தேவார பாடசாலைகள் (அல்லது) வேத பாடசாலைகளில் மூன்றாண்டுகள் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

17. சங்கீத இசை ஆசிரியர்

பணியிடம் 

சம்பளம் 35400-112400

கல்வித்தகுதி

குரலிசையில் மூன்று வருட பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும் (அல்லது) இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் (மற்றும்) இசை ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி.

18. ஆகம ஆசிரியர் 

பணியிடம் 1

சம்பளம் 35900-113500

கல்வித்தகுதி

ஏதேனும் வேத ஆகம் பாடசாலையில் (சைவம்) ஈந்தாண்டுகளுக்குக் குறையாமல் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் ஐந்தாண்டு கால அளவிற்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்திருக்க வேண்டும். சைவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத ஆகம் பாடசாலையில் நான்கு ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி நிபந்தனைகள்

விண்ணப்பதாரர் 01.07.2024ந் தேதியில் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இந்து மதத்தை சார்ந்தவராகவும் (உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்). இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

தொற்று நோய், மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள் அரசுப் பணியிலிருந்து பொது ஸ்தாபனங்களில் இருந்தும் இதர திருக்கோயில்களில் இருந்தும் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து (Self Atested) இணைக்கப்பட வேண்டும். (அசல் சான்றிதழ் அனுப்பக்கூடாது)

விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணமாக பிறப்புச்சான்றிதழ் நகல் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் கல்விச் சான்று நகல், வயதுச்சான்று நகல், உடல் தகுதிக்கான மருத்துவச் சான்று நகல் மற்றும் நன்னடத்தைச் சான்று நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், கேட்கப்பட்ட சான்று நகல்கள் இணைக்கப்படாமலும், வரப்பெறும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும் பணியிட மாறுதல் செய்யப்படுவர்.

பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள் நேர்முக தேர்வின் போது கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு பின்னர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்கு திருக்கோயிலில் இருந்து எவ்வித தகவலும் அனுப்பப்படமாட்டாது.

முதுநிலை அல்லாத திருக்கோயில்களில் பணிபுரியும் தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

http://www.hrce.tn.gov.in https://annamalaiyar>hrce.tn.gov.in திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் பணியிட வரிசை எண் மற்றும் பணியிடத்தை குறிப்பிட்டு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும், ரூ.25/-மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஓட்டிய சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும். மேற்படி, இணைப்புகளுடன் வரப்பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 28.02.2025 பிற்பகல் 5.45 மணிக்குள்.

இதர விபரங்களை அலுவலகத்தில், அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :-

இணை ஆணையர் / செயல் அலுவலர்

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 

திருவண்ணாமலை-606601

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://annamalaiyar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

✅TNHRCE Tiruvannamalai Recruitment 2025 

✅காலி இடங்கள்: 109 தட்டச்சர் காவலர்,கூர்க்கா, ,பெருக்குபவர்,கால்நடை பராமரிப்பாளர் ,உபகோயில் காவலர் etc.. 

✅விண்ணப்பிக்க Link: 

✅கல்வி தகுதி: 10th, ஐடிஐ, தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் 

✅விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.02.2025

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback