Breaking News

செல்போன் பார்த்தபடியே சாலையை கவனகுறைவாக கடந்த நபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த காவலர் பணியிடமாற்றம்

அட்மின் மீடியா
0

செல்போன் பார்த்தபடியே சாலையை கவனகுறைவாக கடந்த நபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த காவலர் பணியிடமாற்றம்



கோவை: சாலையை கடக்கும்போது செல்போன் பார்த்தபடி சென்ற மோகன் ராஜை ஹெல்மட் அணியாமல் வந்த காவலர் ஜெயப்பிரகாஷ் கன்னத்தில் அறைந்த சிசிடிவி காட்சி

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் நேற்று நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது செல்போனை பார்த்தவாறு கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கவுண்டம்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் ஜெயபிரகாஷ் திடீரென மோகன்ராஜ் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதில் மோகன்ராஜ் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. மேலும் இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆனது. 

இதையடுத்து இளைஞரை தாக்கிய தலைமை காவலர் ஜெயபிரகாசை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback