Breaking News

நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் போனில் ரீல்ஸ் வீடியோ பார்த்து கொண்டிருந்த மருத்துவர் உயிரிழந்த நோயாளி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் போனில் ரீல்ஸ் வீடியோ பார்த்து கொண்டிருந்த மருத்துவர் உயிரிழந்த நோயாளி வைரல் வீடியோ Woman dies of heart attack as doctor watches reels in UP



உத்தரப்பிரதேசம் - மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவேஷ் குமாரி (60) என்ற பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மகாராஜா தேஜ்சிங் அரசு மாவட்ட மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர் டாக்டர் ஆதர்ஷ் சங்கர் நோயாளிக்கு சிக்கிச்சை அளிக்காமல் அவரது தொலைபேசியில் ரீல்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் மருத்துவரை பலமுறை அழைத்தும் அவர் மொபைல் போனில் முழ்கிகொண்டு இருந்ததால் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகின்றது

சுமார் 5 நிமிடங்களுக்கும் மேலாக வேதனையில் துடித்த பிரவேஷ் குமாரி, முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-

https://x.com/adminmedia1/status/1884602459013951820

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback