Breaking News

தன் வீட்டில் குடியிருந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க. பிரமுகரை துடைப்பத்தால் துவைத்த பெண்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

தன் வீட்டில் குடியிருந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க. பிரமுகரை துடைப்பத்தால் துவைத்த பெண்கள் வைரல் வீடியோ

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் அதிமுகவின் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவர் தனது மேல் மாடியில் உள்ள வீட்டைத் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். 

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடியேறினர்.இருப்பினும் அந்த பெண்கள் வசித்த வீட்டிற்கும் சென்று மீண்டும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் தனது சக தோழிகளோடு சேர்ந்து அதிமுக நிர்வாகியைத் துடைப்பத்தால் அடித்து விரட்டியுள்ளனர்

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த போலீசார் பொன்னம்பலத்தைக் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

நீக்கம்:-

இளம்பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு துடைப்பத்தால் அடி வாங்கிய அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் கட்சியிலிருந்து நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, திரு. M. பொன்னம்பலம், (குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.என அறிவித்துள்ளார்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1884901862987780130

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback