Breaking News

அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர் மார்பில் காளை முட்டியதில் உயிரிழந்த இளம் வீரர் முழு விபரம்

அட்மின் மீடியா
0

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

இந்நிலையில் ஒன்பதாவது சுற்றில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்கிற மாடுபுடி வீரர் 406 எண் கொண்ட ஜெர்ஸியுடன் விளையாடி வந்தார். 

வாடிவாசலில் இருந்து வந்த காளை ஒன்று நவீன் குமாரின் மர்பில் குத்தியதால், மார்பிலும் முக்கிலும் ரத்தம் சிந்த சிந்த படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்த போலீசார், அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், நவீன் குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback