விளையாட்டு வினையானது சாலையில் சைக்கிளில் சென்ற சிறுவனை விளையாட்ட அடிக்க முற்பட்டபோது ஆட்டோ கவிழந்து விபத்து வைரல் வீடியோ
விளையாட்டு வினையானது சாலையில் சைக்கிளில் சென்ற சிறுவனை விளையாட்ட அடிக்க முற்பட்டபோது ஆட்டோ கவிழந்து விபத்து வைரல் வீடியோ
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சைக்கிளில் சென்ற சிறுவனை முதுகில் அடிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தெருவில் கவிழ்ந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி...
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று மாலை 4 மணி அளவில் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் சிறுவன் ஒருவரும் சைக்கிளில் சென்றுள்ளார். சிறுவனை முந்திக்கொண்டு ஆட்டோ சென்ற நிலையில் சிறுவனை ஆட்டோ ஓட்டுநர், விளையாட்டிற்காக அடிக்க முயன்றபோது கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்தது கவிழ்ந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஆட்டோவை தூக்கி காயமடைந்து கிடந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்டனர்.
ஆட்டோ ஓட்டுநரின் விளையாட்டுத்தனத்தால் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1881683102990532647
Tags: அரசியல் செய்திகள் வைரல் வீடியோ