Breaking News

நாட்டையே உலுக்கிய கொலை வழக்கு காதலனுக்கு விஷம் கொடுத்த காதலிக்கு மரணதண்டனை அதிரடி தீர்ப்பு

அட்மின் மீடியா
0

நாட்டையே உலுக்கிய கொலை வழக்க்கு காதலனுக்கு விஷம் கொடுத்த காதலிக்கு மரணதண்டனை அதிரடி தீர்ப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் ஷாரோன் ராஜ்(23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஷாரோன் ராஜ், களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கீரிஷ்மா என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் வீட்டுக்குத் தெரியாமல் அவர் ஷாரோன் ராஜை காதலித்து வந்திருக்கிறார். மேலும் காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க ஷரோன் ராஜை ரகசியமாக கொலை செய்ய முடிவு செய்தார். 

இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்தார் கரீஸ்மா. மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என ஷரோன் ராஜ்க்கு கரீஸ்மா கொடுக்க அதை ஷரோன் ராஜ் குடித்தார். பின்னர் நண்பருடன் சென்றுகொண்டிருந்த போது ஷாரோன் ராஜ் வாந்தி எடுத்திருக்கிறார்

இதுகுறித்து அவர் நண்பர் கேட்டதற்கு, கீரிஷ்மா கொடுத்த ஜூஸ் குடித்தது ஒத்துக்கொள்ளவில்லை எனக் கூறியிருக்கிறார் ஷாரோன் ராஜ். பின்னர் வீட்டிற்குச் சென்றதும் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜின் உள்ள உறுப்புகள் செயல் இழந்து போயுள்ளன. 

இதையடுத்து அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.ஓராண்டு சிறையில் இருந்த கரீஸ்மா ஜாமினில் வெளியேவந்தார். 

இந்த வழக்கு நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. 95 சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட் ஷாரோன் கொலை வழக்கில் கிரீஷ்மா மற்றும் விஷம் வாங்கிகொடுத்த அவரது தாய்மாமா நிர்மல் குமார் அகியோர் குற்றவாளிகள் என கூறியுள்ளது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளம்பெண் க்ரிஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது மேலும் கிரீஷ்மாவின் மாமாவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback