Breaking News

ஆட்டோ சங்கங்கள் கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தினால் நடவடிக்கை - போக்குவரத்து துறை எச்சரிக்கை..!

அட்மின் மீடியா
0

ஆட்டோ சங்கங்கள் கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தினால் நடவடிக்கை - போக்குவரத்து துறை எச்சரிக்கை..!

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டண உயர்வு என ஆட்டோ சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் அரசு அனுமதியின்றி தன்னிச்சையாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டண உயர்வை மேற்கொள்ள முடியாது. அரசுதான் முடிவு செய்யும். ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக முடிவுகள் அனைத்துமே அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது. எனவே பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் சில ஆட்டோ சங்கங்கள் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக வெளியாகும் அறிவிப்புகள் எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. 

நாளை ஆட்டோ சங்கங்களுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம். புகார் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback