Breaking News

கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி புகார்

அட்மின் மீடியா
0

கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி புகார்

நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி புகார் மனு அளித்துள்ளார்

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில், 

தமிழகம் ஈரோட்டில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டங்களில் பரப்புரையாற்றும்போது கடுமையான, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது திராவிட இயக்கத்தினுடைய ஒப்பற்ற தலைவராக விளங்கும் தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏளனமாகப் பேசுவது மற்றும் மதம், ஜாதி, இனம் எனப் பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அமைதியான முறையில் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணைய சட்டவிதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். ஆகவே, இவரின் நாம் தமிழர் கட்சியினுடைய அங்கீகாரத்தை ரத்துசெய்து இவரது இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும்” என்பதனை விரிவாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback